உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிப்பு

இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-22 20:33 IST

ஜகார்த்தா

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்தனர்.

குகையின் சுவரில் காணப்படும் சிவப்பு நிற கை ஓவியம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பழமையான பாறை ஓவியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மற்ற ஓவியங்களில்பறவைகளின் தலைகள் மற்றும் பிற விலங்குகளின் அம்சங்களைக் கொண்ட மனித உருவங்கள் காணப்பட்டன. குகைச் சுவரில் கைகளை வைத்து, அதன் மேல் நிறமிகளை ஊற்றி இந்த உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில விரல் நுனிகள் கூர்மையாக தெரியும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

'இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என்றும் இது ஸ்பெயினில் உள்ள 66,700 ஆண்டுகள் பழமையான நியண்டர்தால் கை அச்சை விட சற்றே பழமையானது என்றும் தெரிவித்தனர். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 73,000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் கற்களில் செதுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்