

திருத்துறைப்பூண்டி,;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற மானைக்கால் மகா மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த ஆலயத்தின் 65-ம் ஆண்டு திருவிழா கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காப்புக் கட்டி தொடங்கியது. விழா நாட்களில் தினசரி சாமி விதி உலா மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 12-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) தீமிதி திருவிழா நடைபெறுகிறது. நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் சாமி வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.