சண்டே ஸ்பெஷல்: மணக்க.. மணக்க.. மட்டன் குழம்பு வாசனையில் சுண்டல் குழம்பு.. எப்படி செய்யலாம்..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் சுவையான சுண்டல் குழம்பு செய்வது எப்படி என்பது பற்றி பார்க்கப்போகிறோம்.;

Update:2025-12-21 11:33 IST

தேவையான பொருட்கள்

கருப்பு சுண்டல் - 150 கிராம்

நல்லெண்ணெய் - ஒரு கரண்டி

சின்ன வெங்காயம் - 10

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

கல்பாசி - சிறிதளவு

கிராம்பு - 4

பட்டை - 2

பிரிஞ்சி இலை - 1

மல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

மசாலா தயாரிக்க தேவையானவை

நல்லெண்ணெய் - ஒரு கரண்டி

கொத்தமல்லி - 3 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - அரை டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

பட்டை - சிறியது

கிராம்பு - 4

காய்ந்த மிளகாய் - 6

பூண்டு - 6 பல்

இஞ்சி - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

தேங்காய் - 1 சில் அளவு

செய்முறை

முதலில் மசாலா எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்

ஒரு வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி அது சூடேறியதும் கொத்தமல்லி, சீரகம், மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சிவக்க வதக்கவும்.

அத்துடன் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து, தக்காளியை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து, துருவிய தேங்காயை சேர்க்கவும். 2 நிமிடம் நன்கு வதக்கிய பிறகு, அடுப்பை அணைத்து ஒரு பிளேட்டில் தட்டி நன்கு ஆறவிடவும். பிறகு, இவை அனைத்தையும் மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும். இப்போது மசாலா ரெடி.

 

சுண்டலை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிக் கொள்ளவும். அடுத்து ஒரு குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாகியதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, கல்பாசி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். வெட்டிவைத்த சின்ன வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை போடவும். அத்துடன் ஊறவைத்த கருப்பு சுண்டலை சேர்க்கவும். நன்கு கிளறிவிட்டு அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும்.

அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும். தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிவைக்கவும். 5 விசில் வந்தவுடன், காற்று முழுமையாக வெளியேறியதும் குக்கரை திறந்து மல்லி இலை தூவி இறக்கவும். மட்டன் வாசனையில் மணமணக்கும் சுண்டல் குழம்பு தயார்.

Tags:    

மேலும் செய்திகள்