2வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தான் அணி 286 ரன்கள் குவிப்பு

ஜிம்பாப்வே சார்பில் நியாம்ஹுரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .
2வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தான் அணி 286 ரன்கள் குவிப்பு
Published on

ஹராரே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கம் முதல் ஆப்கானிஸ்தான்  அணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த செடிகுல்லா அடல் சதமடித்து அசத்தினார் . அப்துல் மாலிக் 84ரன்கள் எடுத்தார் . இதனால் 50 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் அணி 286 ரன்கள் எடுத்தது . ஜிம்பாப்வே சார்பில் நியாம்ஹுரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com