2வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் அணிகள் நாளை மோதல்

முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
2வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் அணிகள் நாளை மோதல்
Published on

ஹராரே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது . இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com