இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது.
image courtesy: ICC
image courtesy: ICC
Published on

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ம் தேதி பகல் - இரவு ஆட்டமாக தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் புதுமுக ஆல் ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார். மிட்செல் மார்ஷ் காயத்தால் அவதிப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு:- பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் சுமித், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பியூ வெப்ஸ்டர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com