3-வது டி20: ஹர்ஷித் ராணா அபாரம்.. தென் ஆப்பிரிக்கா திணறல்

ரன்களை குவிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது
3-வது டி20: ஹர்ஷித் ராணா அபாரம்.. தென் ஆப்பிரிக்கா திணறல்
Published on

தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. ரன்களை குவிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் , ரீசா ஹென்ரிக்ஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் ரீசா ஹென்ரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  பின்னர் டி காக் 1 ரன்களிலும், பிரேவிஸ் 6 ரன்களிலும் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பவர்பிளே முடிவில் ( 6 ஓவர்கள்) தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 25 ரன்களுடன் தடுமாறி வருகிறது. மார்க்ரம் 17 ரன்களுடனும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com