3வது டி20: இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்

3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.
3வது டி20: இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்
Published on

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வென்று தொடரை வெல்ல இந்திய அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முந்தைய போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை அணி முயற்சிக்கும். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com