5 பந்தில் 5 விக்கெட்: அயர்லாந்து பவுலர் சாதனை

26 வயதான கர்டிஸ் கேம்பர் அயர்லாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார்.;

Update:2025-07-11 06:45 IST

Image Courtesy: X (Twitter) / File Image

டப்ளின்,

அயர்லாந்தில் உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் கர்டிஸ் கேம்பர் என்ற வேகப்பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக 5 பந்துகளில் 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். டப்ளினில் நடந்த இன்டர் புரோவின்சியல் டி20 கிரிக்கெட் தொடரின் ஒரு ஆட்டத்தில் மன்ஸ்டர் ரெட்ஸ் அணி நிர்ணயித்த 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய நார்த் வெஸ்ட் வாரியர்ஸ் 13.3 ஓவர்களில் 88 ரன்னில் சுருண்டு தோல்வி கண்டது.

மன்ஸ்டர் ரெட்ஸ் பவுலர் கர்டிஸ் கேம்பர் 2.3 ஓவர் வீசி 16 ரன் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் தனது 2-வது ஓவரின் கடைசி இரு பந்தில் 2 விக்கெட்டும், 3-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட்டும் சாய்த்தார்.

தொழில்முறை கிரிக்கெட்டில் ஒரு வீரர் தொடர்ந்து 5 பந்துகளில் விக்கெட்டை அறுவடை செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். 26 வயதான கர்டிஸ் கேம்பர் அயர்லாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்