சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: ஆட்ட நாயகன் விருது வெல்ல வாய்ப்புள்ள வீரர்களை கணித்த ரவி சாஸ்திரி

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து மோத உள்ளன.;

Update:2025-03-08 08:20 IST

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன. இதையொட்டி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வெல்ல வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரராக ரவி சாஸ்திரி தனது கணிப்பினை அறிவித்துள்ளார்.

அவரது கணிப்பின் படி, ஆல் ரவுண்டர்களான இந்தியாவின் ஜடேஜா மற்றும் அக்சர் படேல், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகிய மூவரில் ஒருவர் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த போட்டியில் விராட் கோலி (இந்தியா), வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்