செக் மோசடி வழக்கு: ஷகிப் அல் ஹசனை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு
ஷகிப் அல் ஹசனை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.;
image courtesy: AFP
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான ஷகிப் அல் ஹசன் மீது கடந்த டிசம்பர் 15-ம் தேதி 'செக்' மோசடி வழக்கில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்கில் அவர் ஜனவரி 19-ம் தேதிக்குள் ஆஜராகும் படி டாக்கா கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் ஷகிப் அல் ஹசன் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்காளதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.