முதல் ஒருநாள் போட்டி; இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

நாக்பூர்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு ஒருநாள் தொடர் மூலம் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்க இங்கிலாந்து முயற்சிக்கும். அதே வேளையில் சொந்த மண்ணில் வெற்றிப் பயணத்தை தொடர இந்தியா கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com