இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இங்கிலாந்து அணிக்கு அபராதம்.. காரணம் என்ன..?
இங்கிலாந்து- இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது.;
image courtesy:ICC
துபாய்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 112 ரன்கள் குவித்தார்.
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 14.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளை வீழ்த்தார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. இதனால் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்த அனைத்து வீராங்கனைகளுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.