இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்; இந்திய பிளேயிங் லெவனை தேர்வு செய்த வாசிம் ஜாபர்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
image courtesy: @BCCI
image courtesy: @BCCI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய டெஸ் அணியின் புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி களமிறங்கிய நம்பர் 4 இடத்தில் விளையாடப்போகும் வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் 3வது இடத்தில் சாய் சுதர்சன் அல்லது அபிமன்யு ஈஸ்வரனை தேர்வு செய்யலாம் என கூறியுள்ளார்.

வாசிம் ஜாபர் தேர்வு செய்த அணி விவரம்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன் / அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் / குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com