விராட் , ரோகித் இருப்பது வேலையை எளிதாக்குகிறது: கில்
நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுகின்றனர்.;
புதுடெல்லி,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் நாளை நடைபெற உள்ளது. தொடர்ந்து ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்த நிலையில், இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.இந்த தொடரில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுகின்றனர்.
இந்த நிலையில், விராட் கோலி, ரோகித் சர்மா தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கேப்டன் கில் கூறியதாவது,
நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வீரர்களில், ஒருவர் ஒருநாள் போட்டிகளில் எல்லா காலத்திலும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் (ரோஹித்), விராட் பாய் எல்லா காலத்திலும் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களில் ஒருவர். எனவே, நிச்சயமாக, இந்த இரண்டு பேரும் உங்கள் அணியில் இருப்பது உங்கள் வேலையை மிகவும் விராட் பாய் எல்லா காலத்திலும் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களில் ஒருவர். எனவே, நிச்சயமாக, இந்த இரண்டு பேரும் உங்கள் அணியில் இருப்பது உங்கள் வேலையை மிகவும் எளிதாக்குகிறது
மேலும் நீங்கள் எப்போதாவது ஒரு சவாலான சூழ்நிலையில் இருக்கும்போது, அவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் அத்தகைய சூழ்நிலைகளில் சூழ்நிலைகளில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் அல்லது என்ன செய்வார்கள் என்பதை அறிய நீங்கள் அவர்களிடம் செல்லலாம். அந்தத் தகவல் எந்த ஒரு கேப்டனுக்கும் மிகவும் மதிப்பு வாய்ந்தது. என தெரிவித்தார்.