ஷிவம் துபேவிற்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை எப்படி தேர்வு செய்தீர்கள்? - அலஸ்டர் குக்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

புனே,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாண்ட்யா மற்றும் துபே தலா 53 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் சகிப் மக்மூத் 3 விக்கெட்டும், ஓவர்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 182 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 51 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே பேட் செய்தபோது, கடைசி ஓவரில் ஒரு பவுன்சர் பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இன்னிங்ஸ் முடிந்ததும் ஷிவம் துபேவை பரிசோதித்தபோது தலைக்குள் லேசாக அதிர்வு இருப்பதாக உணர்ந்தார். இத்தகைய காயத்துக்கு மாற்று வீரரை அனுமதிக்கலாம் என்ற விதிப்படி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவர் லிவிங்ஸ்டன், பெத்தேல், ஓவர்டான் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.

இந்நிலையில், ஷிவம் துபேவிற்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை எப்படி தேர்வு செய்தீர்கள்? என இங்கிலாந்து முன்னாள் வீரர் அலஸ்டர் குக் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த கன்கஷன் சப்ஸ்டிடியூட் முடிவு ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த ஐ.பி.எல்-லில் ஒரு ஓவர் கூட வீசாத ஒரு பெரிய பேட்டிங் ஆல்ரவுண்டரை, பேட்டிங் செய்யத் தெரியாத அதிக வேகத்தில் வீசும் ஒரு பந்து வீச்சாளரைக் கொண்டு மாற்றுவது எப்படி சரியான முடிவாக இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை.

உண்மையில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. உண்மையைச் சொன்னால், ஒரு சுழற்பந்து வீச்சாளரை எதிர்கொள்வதை விட, ஒரு வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்வதே அவர்களுக்குப் பிடிக்கும், ஆனால் எனக்கு இன்னும் அது புரியவில்லை. ஏனெனில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், ரமந்தீப் சிங் ஆகியோர் உள்ள நிலையில், துபேவுக்கு பதிவில் நீங்கள் 140 கி.மீ. வேகத்தில் வீசும் பந்துவீச்சாளரை எப்படி தேர்வு செய்தீர்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com