தொடர்ந்து அணியில் இடம்பெற்றால் அவர்தான் இந்தியாவின் அடுத்த கேப்டன் - தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் தற்போது எஸ்.ஏ. 20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்.
தொடர்ந்து அணியில் இடம்பெற்றால் அவர்தான் இந்தியாவின் அடுத்த கேப்டன் - தினேஷ் கார்த்திக்
Published on

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் சமீபத்தில் அளித்த பேட்டியில், இளம் வீரர்களான திலக் வர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை பாரட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை மைதானத்தில் விளையாடிய ஆட்டம் ஒரு புத்திசாலித்தனமான இன்னிங்ஸ். போட்டியின் சூழலை புரிந்து கொண்டு அற்புதமாக சேசிங்கை வழிநடத்திக் கொண்டு சென்று முடித்துக் கொடுத்துள்ளார். இன்னும் அவரால் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ரண்களை சேர்க்க முடியும்.

அதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயரை யாரும் பெரியதாக கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் என்னை பொறுத்தவரை அவர் தொடர்ந்து ஒருநாள் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றால் நிச்சயம் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக அவருக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.

ஏனெனில் அவரின் திறமை மீது சந்தேகம் இன்றி ஒரு பக்கம் கேப்டன் மெட்டீரியல் என்பதன் காரணமாகவே அவர் இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இனியும் அவரை தொடர்ந்து புறக்கணிக்காமல் விளையாட வைத்தால் ஸ்ரேயாஸ் ஐயர் தனது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்" என்று கூறினார்.

தினேஷ் கார்த்திக் தற்போது எஸ்.ஏ. 20 லீக் தொடரில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com