18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில்.. தோனியை முந்தி மாபெரும் சாதனை படைத்த ஜிதேஷ் சர்மா

லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஜிதேஷ் சர்மா 85 ரன்கள் அடித்தார்.
18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில்.. தோனியை முந்தி மாபெரும் சாதனை படைத்த ஜிதேஷ் சர்மா
Published on

லக்னோ,

18-வது ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பண்ட் 118 ரன்களும், மிட்செல் மார்ஷ் 67 ரன்களும் அடித்தனர்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 85 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் அடித்தனர். லக்னோ தரப்பில் வில்லியம் ஒரூர்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கம்பீரமாக பிளே ஆப் சுற்றில் விளையாட உள்ளது.

இந்த ஆட்டத்தில் 6-வது வரிசையில் களமிறங்கிய ஜிதேஷ் சர்மா 85 ரன்கள் அடித்து பெங்களூரு அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் சேசிங்கின்போது 6 அல்லது அதற்கும் கீழ் உள்ள பேட்டிங் வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர்களின் சாதனை பட்டியலில் மகேந்திரசிங் தோனி, பொல்லார்டு மற்றும் ரசலை (70 ரன்கள்) முந்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. ஜிதேஷ் சர்மா - 85 ரன்கள்

2. மகேந்திரசிங் தோனி/ரசல்/பொல்லார்டு - 70 ரன்கள்

3. பிராவோ - 68 ரன்கள் 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com