சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்: புதிய விதிமுறை அமல்

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் உள்ள விதிமுறையை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியுள்ளது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

துபாய்,

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை ஐ.சி.சி. அமல்படுத்தியுள்ளது. 2025-27-ம் ஆண்டுக்கான 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் சமீபத்தில் தொடங்கியது. இதில் இருந்து இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி சர்வதேச வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் (ஒருநாள் மற்றும் டி20) உள்ளது போல டெஸ்டிலும் பவுலிங் அணிக்கான நேரக்கட்டுப்பாட்டை ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஒரு ஓவர் நிறைவடைந்த 60 நொடிகளுக்குள் அடுத்த ஒவரை தொடங்க வேண்டும். இல்லையெனில் இருமுறை எச்சரிக்கை விடப்படும். 3வது முறை தாமதம் செய்தால் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். இந்த விதிமுறை தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. நேரத்தை கணக்கிட மின்னணு கடிகாரம் மைதானத்திலேயே வீரர்களின் பார்வையில் படும்படி வைக்கப்பட்டிருக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com