ஐ.பி.எல்.2025: குஜராத் அணியின் துணை பயிற்சியாளராக ஆஸி.முன்னாள் வீரர் நியமனம்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய துணை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2022 மற்றும் 2024 ஐ.பி.எல். சீசன்களில் குஜராத் அணியில் விளையாடியுள்ளார். அதில் 12 போட்டிகளில் 161 ரன்கள் அடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com