ஐ.பி.எல். 2025: குஜராத் அணியின் ஆதிக்கம் தொடருமா..?

ஐ.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.;

Update:2025-04-09 05:26 IST

ஆமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆமதாபாத்தில் இன்று நடைபெறும் 23-வது போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதன் பிறகு மும்பை, பெங்களூரு, ஐதராபாத் அணிகளை அடுத்தடுத்து எளிதில் வீழ்த்தியது.

குஜராத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு நல்ல பார்மில் உள்ளனர். இவர்களின் நிலையான ஆட்டம் தான் குஜராத்தை வீறுநடை போட வைக்கிறது. பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் கலக்குகிறார்கள். 'சுழல் மன்னன்' ரஷித் கானின் பந்து வீச்சு இதுவரை எடுபடவில்லை. அவரும் மிரட்டினால் பந்து வீச்சு மேலும் வலுவடையும்.

ராஜஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தாவிடம் தோற்றது. அடுத்து தொடர்ச்சியாக சென்னை, பஞ்சாப்பை வீழ்த்தியது. பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜூரெலும், பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா, தீக்ஷனா, ஹசரங்காவும் பலம் சேர்க்கிறார்கள்.

ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ராஜஸ்தானுக்கு எதிரான தங்களது ஆதிக்கத்தை நீட்டிக்கும் வேட்கையில் உள்ள குஜராத் அணிக்கு உள்ளூர் சூழல் சற்று அனுகூலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்