ஐபிஎல்: பெங்களூரு அணியின் முக்கிய வீரர் விலகல்
பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.;
பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் தசைப்பிடிப்பு காரணமாக எஞ்சிய போட்டித் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்
அவருக்கு பதிலாக 34 வயது மயங்க் அகர்வாலை ரூ.1 கோடிக்கு பெங்களூரு நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. மயங்க் அகர்வால் 12 ஆண்டுக்கு பிறகு பெங்களூரு அணிக்கு திரும்புகிறார்.பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.