ஐபிஎல் : ஐதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஐபிஎல் : ஐதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
Published on

லக்னோ,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. காயம் காரணமாக பெங்களூரு கேப்டனாக செயல்பட்டு  வந்த ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக களமிறங்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com