ஐபிஎல்: குஜராத் அணியில் இருந்து பட்லர் விலகல்

வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர்.
ஐபிஎல்: குஜராத் அணியில் இருந்து பட்லர் விலகல்
Published on

புதுடெல்லி,

இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும் போது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த மாத கடைசியில் இருந்து மற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகின்றன. தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருப்பதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.-ல் முழுமையாக பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் பட்லர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இலங்கை அணி வீரர் குசல் மெண்டீஸ் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com