ஐபிஎல் : மோசமான சாதனை படைத்த சென்னை அணி

13 ஆட்டங்களில் விளையாடிய சென்னை அணிக்கு இது 10-வது தோல்வியாகும்.
ஐபிஎல் : மோசமான சாதனை படைத்த சென்னை அணி
Published on

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக பிரெவிஸ் 42 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆடியது. ராஜஸ்தான் அணி துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 17.4 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 188 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. 13 ஆட்டங்களில் விளையாடிய சென்னை அணிக்கு இது 10-வது தோல்வியாகும்.

இந்த நிலையில், இந்த தோல்வியால் சென்னை அணி மோசமான சாதனை படைத்துள்ளது 2022ம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு சீசனிலும் அதிகபட்சமாக 10 போட்டிகளில் சென்னை அணி தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்துள்ளது. சி.எஸ்.கே. அணி தனது கடைசி போட்டியில் (மே 25) குஜராத்தை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com