ஐபிஎல்; சென்னையில் நடைபெறும் போட்டிகளை காண மெட்ரோ ரெயில்களில் இலவச பயணம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண மெட்ரோ ரெயில்களில் இலவசமாக பயணிக்கலாம்.
ஐபிஎல்; சென்னையில் நடைபெறும் போட்டிகளை காண மெட்ரோ ரெயில்களில் இலவச பயணம்
Published on

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.

இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரெயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

போட்டி முடிந்து ரசிகர்கள் பாதுகாப்பாக திரும்பவதற்காக, கூடுதலாக 90 நிமிடங்களுக்கு மெட்ரோ சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com