ஐபிஎல்; புதிய அவதாரம் எடுக்கும் கேன் வில்லியம்சன்

முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
ஐபிஎல்; புதிய அவதாரம் எடுக்கும் கேன் வில்லியம்சன்
Published on

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் நாளை (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் வர்ணனையில் ஈடுபடவுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் வில்லியம்சன் விளையாடினார் . அவரை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. இதனால் கேன் வில்லயம்சன் வர்ணனையில் ஈடுபடவுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com