ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.;
Image Courtesy: @IPL
கவுகாத்தி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 5 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் 6வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.
நட்டபு தொடரில் இவ்விரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளன. அதன்படி நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக்கில் பெங்களூருவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மறுபுறம் முன்னாள் சாம்பியன் ஆன ராஜஸ்தான் ராயல்ஸ், தனது முதல் லீக்கில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியிடம் பணிந்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றிக்கணக்கை தொடங்க இரு அணிகளும் தீவர முயற்சி மேற்கொள்ளும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.