ஐ.பி.எல்.: பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை எதிர்கொள்கிறது.
Image Courtesy: @IPL / @PunjabKingsIPL / @LucknowIPL
Image Courtesy: @IPL / @PunjabKingsIPL / @LucknowIPL
Published on

தர்மசாலா,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 52 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் தர்மசாலாவில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பஞ்சாப் அணி 10 ஆட்டங்களில் (6 வெற்றி, 3 தோல்வி, 1 முடிவில்லை) 13 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் லக்னோ அணி 10 ஆட்டங்களில் ( 5 வெற்றி, 5 தோல்வி) கண்டு புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றிபாதைக்கு திரும்பும் முனைப்பில் லக்னோவும், வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com