ஐ.பி.எல்.: 18 ஆண்டுகளாக தொடரும் மும்பை அணியின் மாபெரும் சாதனை

ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது.
image courtesy:twitter/@IPL
image courtesy:twitter/@IPL
Published on

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் ரிக்கெல்டன் 61 ரன்களும், ரோகித் 53 ரன்களும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 48 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 218 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் மும்பை 100 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 30 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட், கரண் ஷர்மா தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த ஆட்டத்தையும் சேர்த்து 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை அணி 200+ ரன்கள் இலக்கு நிர்னயித்த ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடையவில்லை. 17 போட்டிகளில் 200+ ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அதில் ஒருமுறை கூட எதிரணியை வெற்றி பெறவிடவில்லை. இந்த மாபெரும் சாதனையை மும்பை இந்தியன்ஸ் நடப்பு சீசனிலும் தக்க வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com