Image Courtesy: @IPL / @ChennaiIPL / @PunjabKingsIPL
Image Courtesy: @IPL / @ChennaiIPL / @PunjabKingsIPL

ஐ.பி.எல்.: டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Published on

சென்னை,

10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு  நடக்கிறது.

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

7-ல் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேவேளையில் பஞ்சாப் அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி, 1 முடிவில்லை என 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

இதையடுத்து இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com