பாய்ந்து பீல்டிங் செய்த இஷான் கிஷன்.. தடுத்த பந்தை தேடிய சம்பவம்.. வீடியோ வைரல்

பஞ்சாபுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.;

Update:2025-04-12 21:45 IST

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் அடித்தார். ஐதராபாத் தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் களமிறங்கி உள்ளது.

இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி பீல்டிங்கின்போது பஞ்சாப் பேட்ஸ்மேன் பிரம்சிம்ரன் சிங் அடித்த பந்தை பவுண்டரி செல்ல விடாமல் இஷான் கிஷன் பாய்ந்து விழுந்து தடுத்தார். பின்னர் எழுந்த இஷான் கிஷன் தடுத்த பந்தை தேடினார். இருப்பினும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கம்மின்ஸ் வந்து பந்தை எடுத்து வீசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்