சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார் மேத்யூஸ்

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை மேத்யூஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

காலே,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை கடந்த மாதம் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது நடைபெற்று வரும் வங்காளதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முடிந்ததும் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்திருந்தார்.

அந்த சூழலில் இலங்கை - வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியுடன் மேத்யூஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார். அவருக்கு ஆட்டமிழந்ததும் வங்காளதேச அணியினர் அவருக்கு கைகுலுக்கி பிரியா விடை கொடுத்தனர்.

எனினும் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய மேத்யூஸ் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 39, 8 ரன்கள் மட்டுமே அடித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com