ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீராங்கனை

சோபி டிவைன் இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெற உள்ளதாக கூறியுள்ளார்.
image courtesy: @T20WorldCup
image courtesy: @T20WorldCup
Published on

வெல்லிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை சோபி டிவைன். இவர் நியூசிலாந்து அணிக்காக 151 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3990 ரன்னும், 107 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார். அதேபோல், 146 டி20 போட்டிகளில் ஆடி 3432 ரன்னும், 119 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக தனது 16 வயதில் அறிமுகமான சோபி டிவைன் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், சோபி டிவைன் இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற உள்ளதாக கூறியுள்ளார்.

13வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஓய்வு குறித்து சோபி டிவைன் கூறியதாவது,

விலகுவதற்கான சரியான நேரம் இதுவாகதான் இருக்கும் என நினைக்கிறேன். நியூசிலாந்து அணியில் விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பேன். டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com