அடுத்த ஐ.பி.எல். சீசனில்... இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி கருத்து
ஐ.பி.எல். தொடரில் சூர்யவன்ஷி 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்து அசத்தினார்.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ஆர்.சி.பி. சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதன் மூலம் ஐ.பி.எல். நிறைவு விழாவில் சூப்பர் ஸ்டிரைக்கர் விருதை வென்று அசத்தினார். இந்திய யு-19 அணியின் தொடக்க வீரராக இவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஐ.பி.எல். தொடர் குறித்து வைபவ் சூர்யவன்ஷி சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவது அனைவருக்கும் ஒரு கனவு போன்றது. முதல் சீசனில் அதிகமான நேர்மறையான விஷயங்களை கற்றுக் கொண்டேன். அடுத்த சீசனில் அணிக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அதிகமாக கற்றுள்ளேன்.
இந்தமுறை நான் தவறு செய்த இடங்களை எல்லாம் திருத்திக்கொண்டு இன்னும் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன். இந்த சீசனில் விளையாடியதை விட 2 மடங்கு கூடுதலாக அடுத்த சீசனில் விளையாடுவேன். அந்த அளவுக்கு கற்றுள்ளேன்.
எனது அணி அடுத்த முறை இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும். அதில் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பங்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.