வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து நிக் போதாஸ் விலகல்
வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து நிக் போதாஸ் விலகியுள்ளார்.;
image courtesy: AFP
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் நிக் போதாஸ் கடந்த 2023-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பதவிக்காலம் மார்ச் 2026 வரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தற்போதே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவரது சூழ்நிலையை கருதி வங்காளதேச கிரிக்கெட் வாரியமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.