2026 டி20 உலகக் கோப்பை போட்டியை யாரும் பார்க்க மாட்டார்கள் - அஸ்வின்

எதிர்பார்ப்பு உணர்வு இல்லை என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பை போட்டியை யாரும் பார்க்க மாட்டார்கள் - அஸ்வின்
Published on

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இலங்கை,ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், 2026 ஐசிசி டி20 உலக கோப்பையை யாரும் பார்க்க மாட்டார்கள் என முன்னாள் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்தியா - அமெரிக்கா மற்றும் இந்தியா - நமீபியா போன்ற போட்டிகள் உங்களை டி20 உலக கோப்பையிலிருந்து உண்மையில் விலக்கி வைக்கின்றன.1996, 1999 மற்றும் 2003 -ம் ஆண்டுகளில், நான் பள்ளியில் இருந்தபோது, உலக கோப்பை சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்தோம். உலகக் கோப்பை அட்டைகளைச் சேகரித்து அட்டவணையை அச்சிட்டோம். ஏனெனில் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தது. அந்த எதிர்பார்ப்பு இயல்பாகவே உருவாகும்.

இந்தியா முதல் சுற்றில் இங்கிலாந்து, இலங்கை போன்ற அணிகளை எதிர்கொள்ளும். அது அதை இன்னும் உற்சாகப்படுத்தியது. இன்றைய காலகட்டத்தில், அந்த எதிர்பார்ப்பு உணர்வு இல்லை . என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com