இப்போது எங்களது அடுத்த இலக்கு இந்தியாவை.. - தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது.;

Update:2025-11-13 11:46 IST

கொல்கத்தா,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

இதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த ஆவலாக இருப்பதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்ற உண்மையான வேட்கையும், ஆவலும் எங்கள் அணிக்குள் அதிகமாக இருக்கிறது. அனேகமாக தென் ஆப்பிரிக்க அணியின் சுற்றுப்பயணங்களில் மிகவும் கடினமான தொடராக இது இருக்கும். எங்களது திறமையை நாங்களே தரப்படுத்திக் கொள்ளவும், நாங்கள் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்பதை பார்க்கவும் இது அருமையான வாய்ப்பு. இந்திய துணை கண்டத்தில் மற்ற பகுதிகளில் வெற்றி பெற தொடங்கி விட்டோம்.

இப்போது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களது அடுத்த இலக்கு. கொல்கத்தா ஆடுகளம் பாகிஸ்தானில் இருந்தது போல் முழுமையாக சுழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்படும் என நினைக்கவில்லை. இந்தியாவின் பாரம்பரிய டெஸ்ட் ஆடுகளங்கள் போலவே இது இருக்கும் என எதிர்பார்க்கிறேன். அதாவது போக போக ஆடுகளத்தன்மை மாறும்போது சுழலுக்கு உதவும்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்