தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ‘இம்பேக்ட் வீரர்’ விருது வென்றது யார்..?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.;

Update:2025-12-07 18:15 IST

image courtesy:BCCI

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

முன்னதாக ஒவ்வொரு தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. ‘இம்பேக்ட் வீரர்’ விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இம்பேக்ட் வீரராக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

Tags:    

மேலும் செய்திகள்