டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்
2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற உள்ளது.;
ராய்ப்பூர்,
2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற உள்ளது. இதில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி இன்று அறிமுகம் செய்யப்பட்டது. ராய்ப்பூரில் இன்று நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின்போது முதல் இன்னிங்ஸ் இடைவேளையில் இந்திய அணியின் ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை ரோகித் சர்மா, திலக் வர்மா அறிமுகம் செய்து வைத்தனர்.