தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: ருதுராஜ் , கோலி அபார சதம்

2வது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது;

Update:2025-12-03 16:17 IST

ராய்ப்பூர்,

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ரோகித் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 77 பந்துகளில் சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ருதுராஜ் விளாசிய முதல் சதம் இதுவாகும்.

சிறப்பாக ஆடிய கெய்க்வாட் 83 பந்துகளில் 150 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அதேவேளை மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 90 பந்துகளில் சதம் விளாசினார். அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 53 வது சதத்தை விளாசினார். கோலி 93 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

Tags:    

மேலும் செய்திகள்