பாலியல் குற்றச்சாட்டு: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் பேரில், ஹைதர் அலி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2025-08-08 10:42 IST

Image Courtesy: X(Twitter) / File Image

லண்டன்,

பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த 24 வயது இளம் வீரர் ஹைதர் அலி, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிர்ச்சி நிலவுகிறது.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் பேரில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி பெக்கன்ஹாம் மைதானத்தில் MCSAC அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அவர் கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்று வருவதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அவரை உடனடியாக தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

விசாரணை அதிகாரிகள் ஹைதரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, ஜாமீனில் விடுவித்துள்ளனர். ஹைதர், விசாரணையின் போது தன்னை குற்றமற்றவர் என வலியுறுத்தியதாக வட்டாரங்கள் கூறுகின்றன. பிசிபி, இங்கிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து விசாரணையில் முழுமையாக ஒத்துழைப்பதாகவும், தேவையானால் தனிப்பட்ட விசாரணையையும் நடத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

2020-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்காக விளையாடிய ஹைதர், இதுவரை 2 ஒருநாள் மற்றும் 35 டி20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

ஹைதருக்கு இது முதல் சர்ச்சை அல்ல. 2021-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போது கோவிட் கட்டுப்பாடுகளை மீறியதற்காக பிசிபியால் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதே ஆண்டில், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயண அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்