தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

சாம்பியன்ஸ் டிராபியில் இன்று தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன.
Published on

ராவல்பிண்டி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ராவல்பிண்டியில் இன்று நடைபெறுகின்ற 7-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் தற்சமயம் அங்கு மழை பெய்வதான் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com