வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை - வங்காளதேசம் முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளது.;

Update:2025-06-15 19:32 IST

image courtesy:ICC

காலே,

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி காலே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனையடுத்து 2-வது மற்றும் கடைசி போட்டி கொழும்புவில் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்சயா டி சில்வா தலைமையிலான அந்த அணியில் தினேஷ் சண்டிமால், மேத்யூஸ், குசல் மெண்டிஸ் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி விவரம் பின்வருமாறு:- தனஞ்சயா டி சில்வா (கேப்டன்), பதும் நிசாங்கா, ஓஷடா பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சோனல் தினுஷா, பவன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்கே, அகிலா தனஞ்சயா, மிலன் ரத்நாயக்கே, அசிதா பெர்னாண்டோ, கசுன் ரஜிதா மற்றும் இசிதா விஜேசுந்தரா. 

Tags:    

மேலும் செய்திகள்