சையத் முஷ்டாக் அலி கோப்பை; தமிழகம் - சவுராஷ்டிரா அணிகள் இன்று மோதல்

தமிழகம் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
Image Courtesy: @TNCACricket
Image Courtesy: @TNCACricket
Published on

இந்தூர்,

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகள் தங்களுக்குள் 'நாக்-அவுட்' சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் காலிறுதியை எட்டும்.

இந்த தொடரில் குரூப் பி-யில் இடம் பெற்றுள்ள தமிழகம் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இதையடுத்து இந்த தொடரின் 6வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. இதில் தமிழக அணி, சவுராஷ்டிராவை இன்று எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com