டி20 கிரிக்கெட்; பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
Image Courtesy: @ACBofficials
Image Courtesy: @ACBofficials
Published on

ஹராரே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியும், 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்பே 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 127 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 31 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 128 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ஆப்கானிஸ்தான் அணியும் விக்கெட்டுகளை இழந்து திணறியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இறுதியில் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 128 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com