டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா மாபெரும் சாதனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.;

Update:2025-12-12 04:15 IST

சண்டிகார்,

இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் நேற்றிரவு அரங்கேறியது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி காக் 90 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 214 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் திலக் வர்மா 62 ரன்கள் அடிக்க, தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பார்த்மேன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணியின் 13-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற மாபெரும் சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்துள்ளது.

அந்த பட்டியல்:

1. தென் ஆப்பிரிக்கா - 13 வெற்றிகள்

2. ஆஸ்திரேலியா/இங்கிலாந்து - 12 வெற்றிகள்

3. நியூசிலாந்து/ வெஸ்ட் இண்டீஸ் - 10 வெற்றிகள்

Tags:    

மேலும் செய்திகள்