டி20, ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி.. எப்போது தெரியுமா..?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.;

Update:2025-03-30 16:16 IST

image courtesy: PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது.

அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. ஒருநாள் தொடர் நிறைவடைந்த உடன் டி20 தொடர் அக்டோபர் 29-ம் தேதி தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் முழு போட்டி அட்டவணை:-

ஒருநாள் தொடர்:-

1. முதல் ஒருநாள் போட்டி - அக்டோபர் 19-ம் தேதி

2. 2-வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 23-ம் தேதி

3. 3-வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 25-ம் தேதி

டி20 தொடர்:-

1. முதல் டி20 - அக்டோபர் 29-ம் தேதி

2. 2-வது டி20 - அக்டோபர் 31-ம் தேதி

3. 3-வது டி20 - நவம்பர் 2-ம் தேதி

4. 4-வது டி20 - நவம்பர் 6-ம் தேதி

5. 5-வது டி20 - நவம்பர் -ம் தேதி

Tags:    

மேலும் செய்திகள்