இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு
இந்தியா - இலங்கை முதல் டி20 போட்டி 21-ம் தேதி நடைபெற உள்ளது.;
image courtesy:PTI
மும்பை,
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்த மாதம் 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
அதன்படி இந்தியா - இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி 21-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. 2-வது போட்டி 23-ம் தேதி அதே மைதானத்தில் நடைபெற உள்ளது. கடைசி 3 போட்டிகள் முறையே 26, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
2016-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை மகளிர் அணி டி20 தொடரில் விளையாட இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய மகளிர் அணி பங்கேற்கும் முதல் போட்டி இது என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ரிச்சா கோஷ், தீப்தி சர்மா போன்ற நட்சத்திர வீராங்கனைகள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி விவரம் பின்வருமாறு: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி சர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்கூர், ரிச்சா கோஷ், ஜி கமலினி, ஸ்ரீ சரணி, வைஷ்ணவி சர்மா.