வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. முன்னணி வீரர்களுக்கு இடமில்லை

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி ஜூலை 19-ம் தேதி நடைபெற உள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை) வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 19-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான அந்த அணியில் கேமரூன் கிரீன், டிம் டேவிட், ஜோஷ் ஹேசில்வுட், மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இருப்பினும் அந்த அணியில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஸ்டோய்னிஸ் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை.

ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு:- மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், கூப்பர் கோனொலி, டிம் டேவிட், பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மாட் குஹ்னெமன், கிளென் மேக்ஸ்வெல், மிட்ச் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com